பஸ் கட்டணத்தை குறைக்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
(UTV|COLOMBO)-பழைய விலைக்கே பஸ் பயணக்கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பஸ் பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார். பழைய விலைக்கு பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி…