பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு
(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவின் விளக்கமறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுதினம் 14ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டார். விபத்தில் காயமடைந்த அவர் ஶ்ரீஜயவர்தபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்…