பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து
(UTV|COLOMBO)-பேரூந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இன்று(03) முன்னெடுக்கவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காத காரணத்தினால் குறித்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்திருந்தார்.