பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…
(UTV|COLOMBO)-லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் அந்தநாட்டுக்கு பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத வகையில் பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பொதுநலவாய வர்த்தக அமைப்பின் இந்தவருடத்தின் மூலோபாய பங்குதாரராக இலங்கை…