பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில்
(UTV|COLOMBO) இலங்கையின் பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. நான்கு வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பெறுபேறாக இதனைக் கருத முடியும் என்று கலாசார பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிகழ்வு பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவிருக்கின்றது. பொம்மலாட்டக் கலையுடன் தொடர்புடைய கலைஞர்கள் இதில் பங்கேற்க முடியும்.