நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6-7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பலன்கள் எதிர்வரும் 12 தொடக்கம் 18 மாதங்களில் கிடைக்கப்பெறும். இதன்அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…

Read More