மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்
(UTV|MANNAR)-மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகள் காரணமாக கல்வி பொது தராதர உயர்கல்வி, பாடசாலையில் இடம்பெற்றுவரும் 2ம் தவணை பரீட்சைக்காக ஆயத்தப்படுத்தும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மின்விநியோக தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர், அமைச்சர் சியம்பலப்பிட்டியவிடம் வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் இடம்பெற்றுவரும் மின் தடை காரணமாக மாணவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக பெற்றோர்கள்…