மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். கல்வியமைச்சர் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவே சீருடைக்கான துணி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.        

Read More