மாத்தளை பகுதிக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு
(UTV|COLOMBO)-மாத்தளை நாஉல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பிரதேசங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள மதஸ்தலங்கள் மற்றும் பொது நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை தயார் நிலையில் இருப்பதாகவும் பொலிஸ் வீதி தடுப்பு ஏற்படுத்தி பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….