மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்
(UTV|MANNAR)-மன்னார் சதொச கட்டட வளாகத்தில் 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின்போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாகவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், எந்தவொரு எலும்புக்கூட்டிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 55 மனித…