மீண்டும் 5ம் திகதி ஜனபலய கொழும்புக்கு
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 5ம் திகதி நாட்டின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் மக்களை கொழும்பிற்கு அழைப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சுதந்திர கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பில் விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …