முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்-கார்த்திக்

(UTV|INDIA)-கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம். இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்….

Read More