யாழில் பதிவாகிய பல தாக்குதல் சம்பவங்கள்
(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நேற்று (22) தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவின் கொக்குவில் பகுதியில், நேற்று மாலை 3.30 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த 9 பேர் கொண்ட குழுவால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டு சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்….