விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான தீர்மானம்
(UTV|COLOMBO)-சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானம் எடுக்கும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…