ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது
(UTV|COLOMBO)-1 கிலோ 280 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.