96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!
(UTV|COLOMBO)-முதல் தடவையாக, சர்வதேச கூட்டுறவுதின கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படவுள்ளன. இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில் கொண்டாடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜூலை 07 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி, கைத்தொழில்…