Editor UTV

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை செப்டெம்பர் மாதம் நடத்த முடியும். பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய…

Read More

விஜேதாசவுக்கான தடை உத்தரவு நீடிப்பு!

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கு தொடர்பில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரினார். இதையடுத்து, இந்த தடை உத்தரவை வரும் 25ம் திகதி வரை…

Read More

இலங்கையில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில்!

இலங்கையில் சுமார் பதினொரு லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் இலங்கையில் மொத்தமாக 1122113 லட்சம் வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாது நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதிமன்றத் துறை எதிர்நோக்கும் பாரி சவாலாக கருதப்படுகின்றது. நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அதிகளவு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள போதியளவு நீதிபதிகள்…

Read More

தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி “சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு” – ஹரீஸ் கோரிக்கை

நூருல் ஹுதா உமர் கல்விசார் நியமனங்களிலும், கல்வி அதிகாரிகள் நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் நடைபெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் நடைபெறுகிறது. எமது நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவற்றை மேன்முறையீடு செய்யவும், விரைவான தீர்வுகளை பெறவும் “சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு” ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்…

Read More

UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது, பிராந்திய நாடொன்றுக்குக் கிடைத்த இரண்டாவது அதிக வாக்குகளை பெற்று இலங்கை தெரிவாகியுள்ளது.

Read More

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என காட்டுவதற்காக போலியான காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த காணொளிக்காக நான்கு சந்தேகநபர்களும் சத்தியப்பிரமாணம் செய்யும் சூழ்ச்சி காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொதுவாக, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வலது கை கட்டை விரலை உயர்த்தி சத்தியப்பிரமாணம் செய்வார்கள் எனவும், இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான காணொளியில் இடது கையை உயர்த்தி தவறான காணொளி எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரின் தலைவன் என…

Read More

லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?

கிறிக்கெட் உலகின் ஜாம்பவானும், பிரபல கிறிக்கெட் வீரருமான லசித் மாலிங்க தனது முகநூலில் அண்மையில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில் இளம் வீரர் ஒருவரின் திறமையான பந்துவீச்சு காணொளியொன்றை பதிவு செய்து  இவர் பற்றிய தகவலை எனக்கு தருமாறும், திறமையாக பந்துவீசக்கூடிய இவருக்கு எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் பாராட்டி அந்த காணொளியை பதிவு செய்ததுடன், மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கொண்டு சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட பந்துவீச்சாளராகவும் காணப்பட்டார். இது தொடர்பில் எமது யூ…

Read More

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னெப்போதையும் விட வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு தீர்க்கமாகச் செயல்படுவோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம், அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கிண்ணமானது அமெரிக்காவில் ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளை மாத்திரம் எதிர்கொண்ட இலங்கை அணி, அந்த…

Read More

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் இந்த தகவலை உறுதிபட அறிவித்துள்ளார் ரணில். எவ்வாறாயினும் ரணிலை ஆதரிப்பதா இல்லையேல் தனி வேட்பாளரை நிறுத்துவதா என்பதுபற்றி பொதுஜன பெரமுன எதிர்வரும் வாரம் இறுதியான தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

Read More

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டணபட்டியலுக்கும் அங்கீகாரம்!

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டண பட்டியலுக்கு நேற்று (06) அங்கீகாரம் வழங்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இன்று (07.06.2024) இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்கட்டண பட்டியலானது, இலங்கை மின்சார சபையின் சேவைகளை செயல்திறன் மிக்கதாக மாற்ற வழி வகுக்கும். மேலும் அதன் தரம், சேவைகள், வெளிப்படைத்தன்மை, தனியார் பங்கேற்பு, முதலீடுகள் மற்றும் இறுதிப் பயனரின்…

Read More