Editor UTV

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது

2023ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது. குறித்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிலையில் வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததையடுத்து மனுக்களின் விசாரணையை முடித்த நீதியரசர்கள் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும்…

Read More

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 44 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது….

Read More

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக பிரபாசங்கர் நியமனம்!

பாறுக் ஷிஹான் சுகாதார அமைச்சின் செயலாளரினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட டொக்டர் டீ.பிரபாசங்கர் இன்று (6) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அறிக்கை செய்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த டொக்டர் பிரபாசங்கர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளதுடன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் காத்தான்குடி கொரோனா வைத்தியசாலை பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, குறித்த பிரதிவாதியை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கு மைத்திரிபால சிறிசேன 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்…

Read More

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு

மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர். 2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தை, இரண்டு சட்டங்களையும் ஒப்பிடும் போது, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற விடயங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடும் மக்களும் வங்குரோத்து நிலையில் உள்ள வேளையில், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டிற்குப் பாதிப்பை…

Read More

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க, கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொள்ளுப்பிட்டி வாழுகாராம மகா விகாரை உட்பட ஐந்து மகா விகாரைகளின் விகாராதிபதி, ஊவா பிராந்திய பிரதம…

Read More

காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்டு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 10,000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Read More

மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி!

உலகின் முன்னனி செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு, இலங்கைத் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்துள்ளார். உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை வெளியிடப்படும் என்றும்…

Read More

அநுர- சஜித் விவாதம் இன்று! நடக்கப்போவது என்ன?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான அரசிய விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஒன்றின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இரு தரப்பினருக்கும் விவாத ஒளிபரப்பு தொடர்பில், எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார். கடந்த 21.03.2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார…

Read More

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

– நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் உலகின் இலக்கை, தேசிய கொள்கையில் உள்வாங்கிய முதலாவது ஆசிய நாடு இலங்கையாகும் – காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். – யுக்ரேன் யுத்தத்திற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த வருடம் ஒதுக்கிய தொகையை இரண்டு வருடங்களுக்கு காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்குப் பயன்படுத்தலாம். -உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 களில்…

Read More