ஹிட்லராகவும், சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
(UTV | கொழும்பு) – நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்தம் செய்த நான் இன்று சர்வாதிகாரியாகவும், ஹிட்லராகவும் சித்தரிக்கப்படுகிறேன். அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க முடியாது, இராணுவத்தை களமிறக்குவேன், அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான…