Editor UTV

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி நுவன் போப்பகே நீதிமன்றில் ஆஜர்

(UTV | கொழும்பு) –     ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூரப்படும் குற்றச்சாட்டில் 59 ஆவது சந்தேக நபராக கருதப்படும் சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் போப்பகே இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜராகினார். குறித்த வழக்கானது கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது சட்டத்தரணி நுவன் போப்பகே சந்தேக நபராக அடையாளமிடப்பட்டார். இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம்…

Read More

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) –     கொழும்பின் முக்கிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் உடைந்துள்ளதால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதன் பிரகாரம் கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் உடைந்துள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (17) முதல் வெள்ளவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான கரையோரப் பாதையில் 10 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

அடுத்த ‘ஜி20’ மாநாடு இந்தியாவில்

(UTV | கொழும்பு) –   அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜி-20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் கடந்த இரு நாட்களாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா,இங்கிலாந்து , பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ஜி-20 உச்சி மாநாடு கடந்த 16மற்றும் 17 ஆகிய தினங்களில் நடைப்பெற்றது.

Read More

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி…

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிப் பிரிவு எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார். உள்ளூராட்சிப் பிரிவுகளின் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 20ஆம்…

Read More

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

(UTV | களுத்துறை) –    களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பொத்துப்பிடிய, மொறொந்துடுவ, நாகொட,பொம்புவல, பிலமினாவத்தை மற்றும் வஸ்கடுவ போன்ற சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read More

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   இன்று முதல் தொடர்ந்தும் இரண்டு நாட்களுக்கு இரண்டு மணி நேர மின் துண்டிப்பிணை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பிற்பகல் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More