(UTV | கொழும்பு) – கொழும்பின் முக்கிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் உடைந்துள்ளதால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதன் பிரகாரம் கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் உடைந்துள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (17) முதல் வெள்ளவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான கரையோரப் பாதையில் 10 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.