Editor UTV

INDIA ELECTION 2024 : வெல்லப்போவது யார்? இந்தியா கட்சிகள் பெற்ற இடங்களின் விபரம்

ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகிக்கிறது.தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கட்சி வாரியாக முழு விவரங்களை கீழே காணலாம். பாரதிய ஜனதா ; 244 காங்கிரஸ்: 97 மதச்சார்பற்ற ஜனதா தளம் – 2…

Read More

முஜீபுருக்கு புதிய கடமையை ஒப்படைத்த சபாநாயகர்!

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். சபாநாயகர் தனது அறிவிப்பின்போது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவுக்…

Read More

இந்தியா தேர்தலில்: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவு!

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.கவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகிக்கும் அதேவேளை, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை (Annamalai) கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த தொகுதியில், 33997 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுவரும் நிலையில், தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 26741 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04.06.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு…

Read More

உள்ளூராட்சிமன்ற நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள்!

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் விரைவில் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நிரந்தர நியமனம் வழங்கப்படாத இந்த 8,400 பேரையும் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் நேர்காணல் நடத்தி, பணி மூப்பு அடிப்படையில் உறுதி செய்வதற்கான ஆவணத்தை, 15ம் திகதிக்குள் தயார் செய்ய வேண்டும் என, நேற்று, அனைத்து உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க

2024 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 160 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தமது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். எமது அணியின் பலம் பந்து வீச்சு. கடந்த போட்டிகளில் இரண்டாவதாக பந்து வீசி…

Read More

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம்: நீதிமன்றத்தின் உத்தரவு

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை ஆதரவுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. Parliament Live;

Read More

பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும்(04)…

Read More

சீரற்ற காலநிலை : அதிகரித்துவரும் மரணங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் 9 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் திங்கட்கிழமை (3) காலை 6 மணி வரை அந்த எண்ணிக்கை 16ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 3 தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 5 மரணங்களும், கொழும்பில் 3 மரணங்களும், மாத்தறையில் 6…

Read More

இரத்தினபுரியில் கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம் : மனோ

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம். 1/2 இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவது எமது உரிமை. அது ஒரு சலுகை அல்ல. ஆகவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திரகுமார் இரத்தினபுரி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வருவார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு…

Read More

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (4) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, புதிய விலைகள் நாளையதினம் (4) அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய கடந்த மாதம் (மே) 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 175 ரூபாவினாலும்,…

Read More