Jeevitha

மட்டக்களப்பு, கிரான்குளத்தில் திடீர் தீ – முயற்சித்தும் கட்டுப்படுத்தமுடியவில்லை மக்கள் கவலை

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பில் மண்முனைப்பற்றுப் பிரதேசத்துக்கு உட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் கடற்கரையை அண்மித்துள்ள தோட்டங்களில் நேற்று வெள்ளிக்கிழமை (25) திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் காணப்பட்ட மிகவும் பயன் தரும் தென்னை, பனை, உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அவ்வேளை விவசாயிகள் ஒன்றிணைந்து முயற்சித்தபோதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. அதனையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த…

Read More

மயக்க மருந்து இன்மையால் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் – சபையில் சஜித் ஆவேசம்

(UTV | கொழும்பு) – நாட்டில் வைத்தியசாலைகளில் மயக்க மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக. வைத்தியசாலை கட்டமைப்பில் சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொட்ந்து தெரிவிக்கையில், நாட்டில் வைத்தியசாலைகளில் மயக்க மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன….

Read More

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி

(UTV | கொழும்பு) – அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி -காரைதீவு பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி அல்லது காட்டுப்பூனையினத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை (24) இரவு சருகுப்புலி உள் நுழைந்து கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி…

Read More

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு

(UTV | கொழும்பு) – இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL) வருடத்திற்கான இளம் கண்டுபிடிப்பாளர் (“Junior Inventor of the Year 2023) எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவன தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிறாக் கல்லூரி (தேசிய பாடசாலை)…

Read More

மினி இராணுவ முகாம் அகற்றம்

(UTV | கொழும்பு) – நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம் அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியில் குறித்த முகாம் அமைந்திருந்ததுடன் அம்முகாமில் இருந்து செயற்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். தினமும் வீதி ரோந்து மற்றும் தற்காலிக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இம்முகாம் இராணுவத்தினர் தற்போது தமது செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி அவ்விடத்தில் இருந்து நேற்று (25) அகற்றப்பட்டுள்ளனர். போதைப்பொருள்…

Read More

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

(UTV | கொழும்பு) – குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அவர்கள் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டாலும் அவர்களை நீக்குவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை. அதனால் குற்றம் நிரூபிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்க முடியுமான வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சிறப்புரிமைகளை பயள்படுத்திக்கொண்டு, வெளிநாட்டில் இருந்து சட்ட…

Read More

இங்கிலாந்தில் முதல்முறையாக கருப்பை மாற்று சத்திரசிகிச்சை

(UTV | கொழும்பு) – இங்கிலாந்தில் முதல்முறையாக கருப்பை மாற்று சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. சகோதரி வழங்கிய கர்ப்பப்பையை பயன்படுத்தியே இந்த கருப்பை மாற்று சத்திரகிசிச்சை இடம்பெற்றுள்ளது. ஒக்ஸ்போர்ட்டின் சேர்ச்சில் ஹொஸ்பிட்டலில் இந்த சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 9 மணித்தியால சத்திரகிசிச்சையின் போது சகோதரியின் கருப்பையை அவரது 34 வயது உடன்பிறப்பிற்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சகோதரியின் கருப்பையை அகற்ற 8 மணித்தியாலங்களானது என இந்த சத்திரசிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்….

Read More

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த உத்தரவு

(UTV | கொழும்பு) – வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (25)விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை தொடர்பான தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். BE INFORMED WHEREVER YOU…

Read More

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் கல்வியமைச்சினால் நியமனம்

(UTV | கொழும்பு) – கல்முனை கல்வி வலய, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ. எல். ரியாழ் இன்று (25) கல்முனை வலயக்கல்வி பணிமனையில் வைத்து வலயக்கல்வி பணிப்பாளர் எம். எஸ். எஸ். நஜீம் அவர்களிடமிருந்து தமது நியமன கடிதத்தை பெறுப்பேற்று கொண்டார். கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள் முன்னிலையில் தனது கடிதத்தை பெறுப்பேற்று கொண்டார். கல்முனை,…

Read More

போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி

(UTV | கொழும்பு) – போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு ஏதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை,    ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More