Chief Editor

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

(UTVNEWS | COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Read More

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது தேசிய துக்க தினமாகும்

(UTVNEWS | COLOMBO) – மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More

படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் பலி 8 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – முல்லைத்தீவு கோப்பாபுலவு பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்தலைமையகத்திற்கு முன்னால் படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று இன்று(14) அதிகாலை 5.40 மணியளவில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு படையினன் உயிரிழந்துள்ளதுடன் 8 படையினர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் படைப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Read More

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்

(UTVNEWS | COLOMBO) – மாகாண சபைத் தேர்தல் ஆகக் குறைந்தது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தலை முன்னதாக நடத்துவதனால் ஜனாதிபதித் தேர்தல் எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போகாது. சட்டரீதியான…

Read More

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Travel + Leisure எனப்படும் சஞ்சிகையானது இந்தாண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகில் உள்ள 15 சிறந்த தீவுகளில் இலங்கைக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது. இந்த சஞ்சிகையானது இலங்கையை முதற்தடவையாக இந்த வகைப்படுத்திலில் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பாலி, மாலைத்தீவு, பிஜி, ஹவாய் போன்ற தீவுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) – குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு போக்குவரத்த மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு நகர சபை இணைந்து மேற்கொள்ளும் “CAR FREE ZONE” என்ற மோட்டார் வாகனம் அற்ற தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்விற்காக இவ்வாற போக்குவரத்து மட்டுப்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கிரீன்பாத் வீதி, கன்னங்கரா மாவத்தை, மெட்லேன்ட் கிரசன்ட், ஶ்ரீலங்கா பதனம்…

Read More

பல பிரதேசங்களுக்கு பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO) – சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ…

Read More

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

(UTVNEWS | COLOMBO) – 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று(14) இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.௦௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத இரு அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

(UTVNEWS | COLOMBO) – பெலியத்த பகுதியில் இன்று(14) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Read More

அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் இல்லை

(UTVNEWS | COLOMBO) – அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கூடி கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அங்கத்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்பதற்கு இன்னும் காலம் எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பைசல்…

Read More