பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக பசில் போட்டியிடுவதற்கு கூடுதல் சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் பசில், அமெரிக்காவிலிருந்து விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு திரும்பும் பசில் ராஜபக்சவிற்கு விமான நிலையத்திலிருந்து வரவேற்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக…

Read More

முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா, கடந்த வெள்ளிக்கிழமை (23) 90 ஏக்கர், அல் ஹஸ்பான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். அத்துடன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி .எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக்,…

Read More

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து இருவர் பலி!

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் பணியில் இருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் உதவி ஆணையாளர்கள் 221 பேருக்கும் அலுவலக உதவியாளர்கள் 71 பேருக்கும் முகாமைத்துவ ஊழியர்கள் 88 பேருக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

“அவள் முழு குடும்பத்தையும் நேசிக்கின்றாள்” – அண்மையில் நடைபெற்ற ஆலோசனை நிகழ்ச்சி

(UTV | கொழும்பு) –  ஒரு பெண்ணின் அன்பினால் குடும்பத்தை வெல்ல முடியும். மாளிகாவத்தை இஸ்லாமிக் சென்டரில் நேற்று (14ஆம் திகதி) காதலர் தினமன்று “அவள் முழு குடும்பத்தையும் நேசிக்கிறாள்” என்ற தொனிப்பொருளில் பெண்கள் வலிமையாக நிற்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத் தகராறுகள், காதல் உறவுகள் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளினால் அவதியுறும் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்களின் மென்மையான உள்ளங்களை வலுப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களை நேசிக்க வேண்டும்…

Read More

இலங்கையில் சர்வதேச 03 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை : பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான திட்டம்

கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், “03 சர்வதேச பல்கலைக்கழகங்களை…

Read More

அட்டுலுகம சிறுமி கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

(UTV | கொழும்பு) –  பண்டாரகம – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளி உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 27ஆம் திகதி அன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் மீண்டும்…

Read More

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

(UTV | கொழும்பு) –   யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த  ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதின் பின்னர் திருட்டுச் சம்பவத்தில்…

Read More

புதிய களனி பாலத்தை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –  புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் வீதி திருத்த வேலை காரணமாக திங்கட்கிழமை (12) வரை மூடப்படும் என நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி கட்டுநாயக்காவிலிருந்து களனி பாலத்திற்குள் நுழைந்து துறைமுகத்தை நோக்கி செல்லும் வீதி நேற்று இரவு 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை (12) காலை 5 மணி வரை இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒருகொடவத்தை சந்திப்பில் இருந்து களனி பாலத்திற்குள்…

Read More

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) –  ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயில் உலப்பனை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More