வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கிவரும் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.டி.முனி விசேட உரை நிகழ்த்தினார். பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கினார். பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தில் 30 வருட கால சேவையை…

Read More

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UDHAYAM, COLOMBO) – மழை பெய்த போதிலும் மின்னுற்பத்திக்கான நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கான மின் உற்பத்திக்கு மேலதிகமாக 51 பில்லியன்  ரூபா செலவிட வேண்டி ஏற்படுமென்று மின்சார சபை கணக்கிட்டுள்ளது. இந்த செலவுத் தொகை பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட மாட்டாது. ஆரசாங்கமே இதனை பொறுப்பேற்கும். மாலை 6.30ற்கும் இரவு  10.30ற்கும் இடையிலான காலப்பகுதியில் மேலதிக செயற்பாடுகளுக்காக…

Read More

கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்தேன் – மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல தாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷவினரும், பண்டாரநாயக்கவினரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியது, மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைப்பதற்காக உதவ அல்லவென மகிந்த ராஜபக்ஷ குற்றம்…

Read More

ஜனாதிபதி இன்று இந்தோனேசியா பயணம்

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்ல உள்ளார். இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல், கூட்டு ஒத்துழைப்பை பலப்படுத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை மாநாடு நடைபெறுகிறது. இந்துசமுத்திர சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகள் அமைப்பின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வில் அரச தலைவர்களின் மாநாடு நாளை இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ளது. இதற்கான தீர்மானம் 2015ம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போது…

Read More

கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மக்களுக்கு இன்னல் ஏற்படாத வண்ணம் கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. திருகோணமலை துறைமுக அபிவிருத்தி பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் வங்காளவிரிகுடாவை உலகின் செல்வாக்கான பிராந்தியமாக மாற்ற…

Read More

மகிந்த ராஜபக்ஷவை மகிழ்ச்சியடைய வைத்துள்ள விடயம்!!

(UDHAYAM, COLOMBO) – ஊவ வெல்லஸ்ஸ புரட்சியின் போது தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேசத்துரோகிகள் என்று வெள்ளையர்களால் அறிவிக்கப்பட்ட அனைவரும் இன்று தேசிய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கின்ற விடயம். இதேபோல அவர்களிடம் இருந்து கைவிட்டுப் போன பரம்பரை சொத்துக்கள் மீள கையளிக்க…

Read More

சிறைச்சாலை பேருந்தில் இடம்பெற்ற படு கொலை சம்பவம்: சகோதரர்களின் வழக்கு பிற்போடப்பட்டுள்ளத

(UDHAYAM, COLOMBO) – சிறச்சாலை பேருந்தில் வைத்து படு கொலை செய்யப்பட்ட அருணா தமித் உதயங்க என்ற பாதாள உலகக் குழு தலைவரான ‘சமயங்” என்பவரின் சகோதரர்கள் என கூறப்படும் 2 சந்தேக நபர்களின் வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை குளியாப்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருந்த போதும், அந்த வழக்கு எதிர்வரும் சில நாட்களுக்கு பிற்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் பாதுகாப்பு தொடர்பில்…

Read More

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் ; பிரதான சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சரணடைந்ததனை தொடர்ந்து கைது செய்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

Read More

மனித கொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரொருவர், துப்பாக்கியுடன் கைது

(UDHAYAM, COLOMBO) – கைத்துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் மாபிட்டிகம பிரதேசத்தில் நபரொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் அதுருகிரிய மற்றும் அங்கொட ஆகிய காவற்துறை நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. இதனுடன் இரண்டு மனித கொலைகள் தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

Read More

ஜனாதிபதி தலைமையில் சக்யா பல்கலைக்கழக பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவிகளை கௌரவிக்கும் முகமாக சக்யா பல்கலைக்கழக பாராட்டு விழா பிரதம அதிதியாக ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

Read More