கொவிட் ஜனாஸா எரிப்பு : பொது மன்னிப்பு கேட்க கூறும் ஹக்கீம் : காரணமறியாமல் கேட்கமுடியாது கெஹெலிய வாக்குவாதம்

(UTV | கொழும்பு) – கொவிட் தொழிநுட்ப குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதன் பிரகாரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாகவும் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு…

Read More

இன்றைய நாடாளுமன்றில்…

(UTV | கொழும்பு) – இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (24.08.2023) ‘இலங்கை கிரிக்கெட்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இதன்படி சற்று முன் ஆரம்பமாகி நாடாளுமன்ற அமர்வில் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘இலங்கை கிரிகெட்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும். அதேவேளை மு.ப 10.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச்…

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிங்கப்பூர்…

Read More

13 ஆவது திருத்தத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். – குமார வெல்கம.

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகுதியாக்கினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. ஆகவே, 225 உறுப்பினர்களும் பொறுப்புடன் நாட்டுக்காக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் உள்ள நவ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…

Read More

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்.

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று தேர்தலை நடத்த வேண்டும் அல்லது வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டு சுற்றறிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில்…

Read More

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைக்கிறது – மொட்டு கட்சி.

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது. கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நாளைய தினம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஊருடன் கலந்துரையாடல் என்னும் பெயரில் ஓர் திட்டத்தை ஆரம்பித்திருந்தார். தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் மொட்டு கட்சி இந்த திட்டத்தின் நீட்சியாக நாளை முதல் ஊர்களுக்குச் சென்று மக்களுடன்…

Read More

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்குஉரிமை இல்லை – நிமல் லன்சா.

(UTV | கொழும்பு) –   அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் , அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :…

Read More

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் – பிரேமநாத் சி. தொலவத்த கருத்து.

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த ஆனால் கடந்த காலத்தில் இழந்த அந்த வாய்ப்பை மீண்டும் இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

Read More

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!

(UTV | கொழும்பு) – 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சன்னஜெயசூசுமன வேண்டுகோள் விடுத்துள்ளார்.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை மீண்டும் கடுமையாக கண்டித்துள்ள அவர் தேசத்தின் நலன்களிற்கு பாதகமான விதத்தில் விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் செயற்பட முயல்வதால் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமைதியாகயிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச வென்ற…

Read More

ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை!

(UTV | கொழும்பு) – ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு முன்னர், வில்லவிசென்சியோ பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனால் அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ புதன்கிழமை இரவு தலைநகர் குய்ட்டோவில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால், ஈக்வடோர் முழுவதும் பதற்றம்…

Read More