Category: உள்நாடு
புத்தாண்டை வரவேற்கும் முகமாக காலி முகத்திடலில் இடம்பெற்ற பல்வேறு கோலாகல நிகழ்வுகள் [VIDEO]
(UTV|COLOMBO) – பிறந்திருக்கும் 2020 ஆம் ஆண்டை மக்கள் மிகவும் கோலாகலமாக வரவேற்றனர்.
வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு
(UTVNEWS | COLOMBO) -அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார். கலாநிதி என். எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தும் இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்திற்குள் தகுந்த தீர்வு…
சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன [VIDEO]
(UTV|COLOMBO) – அன்னசின்னத்துக்கு வாக்களித்தால் இந்த நாட்டை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்துவிடுவார்கள் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இப்பொழுது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அரசாங்கத்தை அமைக்க உதவிய பெரும்பாலானோர் மனம்நொந்து போயுள்ளதாககவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று ரத்மலான பகுதியில் இடமபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி இவ் வருடத்தில் நிறைவு [VIDEO]
(UTV|MATARA) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை இவ்வருடத்தின் முற்பகுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]
(UTV|COLOMBO) – மதுபானம் உற்பத்திக்காக பயன்படுத்தும் எதனோல் இறக்குமதிக்கு இன்று(01) முதல் தடை செய்யப்பட்டுள்ளது
விபத்துக்களின் எண்ணிக்கை குறைவு
(UTV|COLOMBO ) – கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு
(UTVNEWS | COLOMBO) –இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு
(UTV|COLOMBO ) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்
(UTVNEWS | COLOMBO) -அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டு மையங்களாக பயன்படுத்தப்படும், 68 பாடசாலைகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பரீட்சை மதிப்பிட்டு மையங்களாக தொழிற்படும் 68 பாடசாலைகளும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி…
அசௌகரியம் ஏற்படுத்தும் பாடல்கள் ஒலிபரப்ப இன்று முதல் தடை
(UTV|COLOMBO ) – பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பாடல்கள், வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்வது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி இது தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற துரித இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பேருந்துகளில் ஒலிபரப்பக்கூடிய பொருத்தமான ஆயிரம் பாடல்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.