பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை

(UTV|COLOMBO) – உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என கருதப்படும் டொக்டர் மாக் மோபியஸ் (Mark Mobius) இன்று(09) காலை இலங்கை வந்தடைந்தார். கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் பாரிய கலப்பு அபிவிருத்தி திட்டமான Cinnamon Life ஏற்பாட்டில் டொக்டர் மாக் மோபியஸ் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடு ஒன்று நாளை(10) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Read More

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

(UTV|COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென புதிய பக்டீரியாவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ‘வோல்பாச்சியா’ (Wolbachia) எனப்படும் பக்டீரியாவை சுற்றுச்சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பை சூழவுள்ள 25 கிராம சேவகர் பிரிவுகளில் பக்டீரியா விடுவிக்கப்படும். குறித்த வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிகவடன தெரிவித்துள்ளார்.

Read More

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 5 மணி நேர வாக்குமூலம்

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி, இரண்டு சட்டத்தரணிகளுடன் நேற்று(08) மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல்…

Read More

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை முதல்

(UTV|COLOMBO) – சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை(10) ஆரம்பமாகவுள்ள நிலையில், புனித பொருட்கள் நாளை மலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்த வகையில் இன்று(09) மாலை பெல்மடுல்ல, கல்பொத்தாவல ரஜமகா விஹாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் உருவச்சிலை மற்றும் ஏனைய புனித சின்னங்களுக்கான விடே பூஜைகள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய நாளை(10) அதிகாலை புனித சின்னங்களை சிவனொளிபாத மலைக்கு எடுத்துச்செல்லும் ஊர்வலம் இடம்பெறவுள்ளது. இந்த ஊர்வலம் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியகொட, அவிஸ்ஸவெல்ல, தெஹியோவிட்ட, கரவனெல்ல, ஹட்டன், மஸ்கெலியா…

Read More

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO) – இன்று(09) முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 40 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) – கடனாக பணம் வழங்கும் போது ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு, அதிகூடிய வட்டி அறிவிடல், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் அந்த முறைப்பாட்டில் அடங்குகின்றன. இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சுடன் இணைந்து பணத்தை கடனாக வழங்கும் நிறுவனம் மற்றும் ஆட்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கல், அவற்றை ஒழுங்கமைத்தல், கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக…

Read More

இன்று மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) மாலை கடுமையான மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கம் காணப்படும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும். 200 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்….

Read More