Category: உள்நாடு
புதிய தலைமையை முன்னிறுத்த தயார்
(UTV|COLOMBO) – புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்
(UTV|COLOMBO) – கட்சித் தலைமை பதவி இல்லாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நிலையை பொறுப்பேற்க போவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
(UTV|COLOMBO) – கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தமது சுற்றுலா பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு
(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு
(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு இதுவரையில் இருந்த 36 ரூபா கூட்டு வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விஷேட வியாபார பொருட்களுக்கான வரி அறிமுகப்படுத்த அரசு எடுத்த தீர்மானத்தினை தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் எதிர்வரும் நாட்களில் விசேட விலைக் குறைப்பில் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.
பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்
(UTV|COLOMBO) – கேகாலை நீதிமன்றம் அருகாமையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடுகளுக்கு பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இல
(UTV|COLOMBO) – சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் 011 597 8725, 011 597 8726 அல்லது 011 597 8728 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு
(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மேலும், கொழும்பு 02,…
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று
(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போது, உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. எனினும், அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு
(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் அதிகாரி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் 12ம் திகதி வரை தடையினை நீடித்து இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.