Category: உள்நாடு
ஜா-எல பகுதியில் ஐவர் கைது
(UTV|COLOMBO) – ஜா-எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஜா-எல பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை கடற்படை சோதனையிட்டதுடன், சந்தேக நபர்களை விசாரித்த போது, முரண்பாடான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 28 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் வேனுடன் ஜா-எல பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் [VIDEO]
(UTV|COLOMBO) – 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிந்தது. உலகையே உலுக்கிய ஆழிப்பேரையில் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை அழிவை ஏற்படுத்தியது. இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்து 196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொல்லப்பட்டன. சுனாமி…
சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு
(UTV|COLOMBO) – இன்று(26) தோன்றவுள்ள வளைய சூரியகிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்ப்பது, கண்களுக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே. அருணிபிரபா பெரேரா தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான பாதுகாப்பு முறைமைகள் தொடர்பில் விளக்கம் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி இன்று
(UTV|COLOMBO) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை
(UTV|COLOMBO) – எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவே தாம் எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்
(UTV|COLOMBO) – எதிர்வரும் 26ம் திகதி காலை 8.36 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படவுள்ளது. காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி 10.30க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதன்போது நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். கிழக்கு வானில் உதயமாகும் சூரியனின் மேற்பகுதியில் அதாவது சூரியனின் மேற்கு…
தென் கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கம்
(UTV|COLOMBO) – கடந்த ஒருவார காலமாக தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக , பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் குறித்த கடல் சிங்கம் அவதானிக்கப்பட்டதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தென்னாபிரிக்காவுக்கு கீழ் திசையில் உள்ள மெரியட் தீவிலிருந்து கடல் நீரோட்டம் மூலமாகவோ அல்லது சமுத்திரத்தில்…
நள்ளிரவு முதல் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு
(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று(25) நள்ளிரவு முதல் இவ்வாறு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.
லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்
(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சிலர் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கையளித்துள்ளதாகவும், பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இரண்டாவது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.