Category: உள்நாடு
இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு
(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச் செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டு, துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், இன்று (25) அதிகாலை பணி முடிந்து…
மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது
(UTV|COLOMBO) – மீன் இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் மீன் இறக்குமதி மீதான வரி ஒரு கிலோ கிராமிற்கு ரூ .100 ஆக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் ஒரு கிலோ கிராமிற்கான வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மீன் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டு மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், குறித்த இறக்குமதி வரியை ஒரு கிலோவுக்கு ரூ .100 வரை…
கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் பிரதமரின் வாழ்த்து
(UTVNEWS | COLOMBO) –பாவங்களில் மூழ்கிக் கிடந்த மனித வர்க்கத்தை மீட்டெடுத்து மானிட சமூகம் கௌரவமாக வாழும் சூழலை உருவாக்க மனித குலத்தின் பிதா மகனான யேசுபிரான் உதித்த இன்றைய நத்தார் தினத்தில் நத்தாரைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துத் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சிறந்த சமூகத்தை உருவாக்க நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம்
UTVNEWS | COLOMBO) –சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மை பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக்கொள்வோம். பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல…
கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு
(UTVNEWS | COLOMBO) –கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் 10 ஏக்கர் காணி ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும் மாநகர சபை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் குப்பைகளை இதுவரை புத்தளம் அருவக்காடு பிரதேசத்துக்கு அனுப்பட்டுவந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் குப்பைகளை மீழ் சுழற்சிக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
UTV வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் [VIDEO]
(UTVNEWS | COLOMBO) –இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் UTVNEWS தனது இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
Missed Call தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை
(UTV|COLOMBO) – வௌிநாடுகளிலிருந்து அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் மிஸ்ட் கோல் (Missed Call) தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான அழைப்புகள் தொடர்பில் 1700 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் வாயிலாக அறியத்தருமாறு குறித்த ஆணைக்குழு கூறியுள்ளது. வௌிநாடுகளுக்குரிய இலக்கங்களிலிருந்து இருந்து கடந்த சில நாட்களாக அலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெறுவதாகவும், யாரும் உரையாடாத நிலையில், மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தினால் அழைப்பானது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை
(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் பயணிகள் பேருந்துக்களில் ஒலிபரப்பக்கூடிய பாடல்களின் பட்டியலை அரசாங்கம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் உரத்த இசை இசைக்கப்படுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம் பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் மியூசிக்…
மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்
(UTV|COLOMBO) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]
(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது. சந்தேக நபருக்கு 25,000 ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.