எதிர்பாராத வளர்ச்சியைக் காட்டும் அமெரிக்க பொருளாதாரம்!

(UTV | கொழும்பு) – அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டின் இறுதி காலப்பகுதியில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க பொருளாதாரம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் 3.3 வீதம் விரிவடைந்துள்ளதாக வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ஆய்வாளர்கள் 2 வீத அதிகரிப்பையே எதிர்பார்த்த நிலையில் இந்த அதிகரிப்பானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.2022 ஆம் ஆண்டில் 1.9 வீதமாக காணப்பட்ட அமெரிக்க பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் 2.5 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி…

Read More

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

75 வதுகுடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

(UTV | கொழும்பு) – தலைநகர் டெல்லியில் இன்று 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கேற்கவுள்ளதுடன் டெல்லியின் அனைத்து எல்லைகளும் முடப்பட்டு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகிறது. மேலும் தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன் இதில் இராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், போர்க்கப்பல்களின்…

Read More

சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி!

(UTV | கொழும்பு) – இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவிற்கு மாலைதீவு அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் சீனாவிற்கு சொந்தமான சியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பலை…

Read More

மாணவர்களுக்கு கனடாவின் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கால அளவை 2 வருடங்களாகக் குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், கருத்துத் தெரிவிக்கையில்” கடந்த 2023 ஆம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர்களின் விசாக்களை குறைக்க…

Read More

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!

(UTV | கொழும்பு) – கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.அதன்படி, எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது எனவும், புலம்பெயர் மாணவர்கள் கனடா நாட்டின்,…

Read More

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சீனா – கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி வரை முதல் பாகிஸ்தானிலும்  உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக…

Read More

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – புதிய விசா திட்டத்தின் ஒரு பகுதியா அவுஸ்திரேலியா தனது “கோல்டன் விசா” முறையினை நீக்கியுள்ளது.இது செல்வந்த முதலீட்டார்களுக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்தியது. மேலும் வெளிநாட்டு வணிகத்தை ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், மோசமான பொருளாதார விளைவுகளுக்கு இந்த விசா முறை வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளது. 2012 முதல் ஆயிரக்கணக்கான குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தின் மூலம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந் நாட்டு…

Read More

சீனாவில் பாரிய மண்சரிவு!

(UTV | கொழும்பு) – சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவையடுத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நேற்று இந்த மண்சரிவு இடம்பெற்றமையானது, அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவியில் மண்சரிவு காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையுண்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு மீட்பு படையினர் முயற்சித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

சிரியாவில் வான்வழித் தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – சிரியாவின் தென்மேற்குப் பகுதியிலான வான்வழித் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.சுவேய்தா மாகாணத்தின் அா்மான் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுவீச்சு, ஈரான் ஆதரவு பெற்ற போதை மருந்து கடத்தல் கும்பலைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்டானால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என கருதப்படினும் இதனை ஜோா்டான் அரசு இதுவரை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வ அமைப்பொன்றின் செய்தி வலைதளம் தெரிவித்துள்ளதாவது: அா்மான் நகரிலும், அருகிலுள்ள மலா நகரிலும் பொதுமக்கள்…

Read More