அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –

புதிய விசா திட்டத்தின் ஒரு பகுதியா அவுஸ்திரேலியா தனது “கோல்டன் விசா” முறையினை நீக்கியுள்ளது.இது செல்வந்த முதலீட்டார்களுக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்தியது. மேலும் வெளிநாட்டு வணிகத்தை ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும், மோசமான பொருளாதார விளைவுகளுக்கு இந்த விசா முறை வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளது. 2012 முதல் ஆயிரக்கணக்கான குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தின் மூலம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந் நாட்டு அரசாங்கத் தரவுகளின்படி 85 சதவீதமான விண்ணப்பதாரர்கள் சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக விசா விண்ணப்பதாரர்கள், அவுஸ்திரேலியாவில் கோல்டன் விசா பெறுவதற்கு 5 (£2.6m;$3.3m) மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை முதலீடு செய்ய வேண்டியிருந்தது.

பல மதிப்பாய்வுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டம் அதன் முக்கிய நோக்கங்களைச் சந்திக்கத் தவறியதை அரசாங்கம் கண்டறிந்தது.
இதனால் கடந்த டிசம்பரில் இருந்து ஒரு கொள்கை ஆவணத்தில், குறித்த திட்டத்தை இரத்து செய்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தது. அதற்கு பதிலாக நாட்டுக்கு அதிகப்படியான பங்களிப்புகளை செய்யும் திறன் கொண்ட திறமையான புலம்பெயர்ந்தோருக்கு அதிக விசாக்களை உருவாக்குவதில் அவுஸத்ரேலியா தற்சமயம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

” இந்த விசா திட்டம் நம் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் தேவையானதை பூர்த்தி செய்யவில்லை என்பது பல ஆண்டுகளாக மதிப்பீட்டில் தெரியவந்துள்ளதாக” அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் திங்களன்று  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *