ஓமானில் மசூதி அருகே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – பலர் காயம்.

ஓமான் நாட்டு தலைநகர் மஸ்கட்டின் வாடிகபீர் பகுதியில் உள்ள மசூதி அருகே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகள், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என பொலிஸார் தெரிவிக்கவில்லை.

Read More

ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவு!

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார். அதன்படி, செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித் துணையாக முன்மொழியப்பட்டுள்ளார். அண்மையில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட தேர்தல் பேரணியின் பின்னணியில் குடியரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர்…

Read More

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்…

Read More

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை – பாகிஸ்தான் அரசு முடிவு.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும். பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க இருப்பதற்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அட்டாவுல்லா தரார், “பிடிஐ கட்சி…

Read More

நேபாளத்தின் புதிய பிரதமர் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்.

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பீ.ஷர்மான ஒலீ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் உட்பட புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். நேபாளத்தின் பிரதமராக இருந்த புஷ்ப கமல் தஹால் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய பிரதமராக கே.பீ.ஷர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை 72 வயதான ஷர்மா இதற்கு முன்னர் இரு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விசா இன்றி தாய்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு அனுமதி.

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான…

Read More

டிரம்ப் மீது 05 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் ?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் காதிலிருந்தும் இரத்தம் சிந்தியது. இதனையடுத்து ட்ரம்பை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து…

Read More

சிங்கப்பூர் மணிமகுடம் புத்தக வெளியீட்டு விழாவில் செந்தில் தொண்டமான்.

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார். சிங்கப்பூர் தமிழவேல் நற்பணி மன்றம் மற்றும் டாக்டர் சேது இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் சிங்கப்பூரின் புத்திஜீவிகள் மன்றத்தில் உரையாற்றினார்.

Read More

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர். எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ட்ரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில்…

Read More

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மின்தனாவோ தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலமட்டத்திலிருந்து 630 கிலோமீற்றர் ஆழத்திற்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More