மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரையில் நாட்டிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை அறிக்கையை கோட்டை நீதவான நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அர்ஜுன் மகேந்திரனுக்கு சர்வதேச பொலிஸார் ஊடாக அழைப்பாணை விடுக்கப்பட்டதுடன் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குமூலமளிக்க ​வேண்டுமென கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்….

Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

(UTV|HAMBANTOTA)-ஹுங்கம, கஹதமோதர குளத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளும் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், ஒரு மகன் மேலதிக சிகிச்சைக்காக தங்காளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய மகன்…

Read More

சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்-அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-நாட்டில் சுற்றாடலுக்கு ஏற்றவகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புதிதாக கைத்தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில்;நுட்ப அறிவும், வசதிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். சர்வதேசத்தின் போக்கிற்கு அமைவாக பசுமையான கைத்தொழில் உற்பத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் பதியூதீன் மேலும் தெரிவித்தார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….

Read More

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நேற்றைய தினமும் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவது சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது….

Read More

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

(UTV|COLOMBO)-அத்துருகிரிய – ஹோகந்தர கிழக்கு பிரதேசத்தில் நேற்று பிற்பகல் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான திலங்க மதுசான் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. குறித்த இளைஞன் வீட்டில் இருந்த போது சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம்…

Read More

இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கே சிரில் சி பெரேரா மாவத்தை, 6 வது ஒழுங்கை பாதையில் இருந்து சுகததாஸ விளையாட்டரங்கின் மெட்பார்க் சந்தி வரையான வீதி இன்று (16) முதல் எதிர்வரும் 02 நாட்களுக்கு வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீதியில் குடிநீர் குழாய் பொருத்தும் வேலைகள் இடம்பெற இருப்பதால் இன்று இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 19ம் திகதி அதிகாலை 05.00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில்…

Read More

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!

(UTV|HATTON)-முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் பெற்றுத்தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர் ஐ.எஸ்.மொஹிடீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் 03 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 04 ஆசனங்களையும், துணுக்காய் பிரதேச…

Read More

மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

(UTV|HATTON)-நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடென்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்து எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்மணி தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும்,…

Read More

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை அந்த ஆணைக்குழுவின் தலைவர் உதித எச்.பலிஹக்காரவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது மத்திய வங்கியின் ஆளுநரும், நிதியமமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.       [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என…

Read More

24 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து ஞாயிறு காலை 9.00 வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. கொழும்பு 1, 2 ,3, 4 ,7, 8 ,9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோக பிரதான குழாய் கட்டமைப்பில் இடம்பெறவுள்ள திருத்தநடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.  …

Read More