புனிதப் போருக்குள் சமூகச் சாயம்
(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகள் சிலருக்கு வியப்பாகவும்,பலருக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம். இவர் தேர்தலில் போட்டியிடும் உண்மையான நோக்கத்தை ஆண்டவனும்,அவரும்தான். அறிவர்.வௌிப்படையாக தனது நோக்கத்தைச் சொல்வாரானால் இதிலுள்ள சரி,பிழைகளை எடை போடக்கூடியதாக இருக்கும்.”எவரின் முகவராகவும் செயற்படவில்லை,முஸ்லிம்களின் முகவராகவே களமிறங்கினேன்” எனக்கூறும் ஹிஸ்புல்லா,வெற்றியை எதிர்பார்க்குமளவுக்கு தானொரு முட்டாளுமில்லை என்கின்றார். எந்த அரசாங்கங்கள் வந்தாலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆமாம் சாமி போடுவதைத் தவிர முஸ்லிம் தலைவர்கள் எதையும் சாதிக்க முடியாதென்றும் அவர்…