யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜோங் உன்

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜோங் உன்

(UTV | கொழும்பு) – கடந்த 20 நாட்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகைப்படங்களை வட கொரிய செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 11ஆம் திகதியன்று ஆளும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன். அதுவே அவர் பங்கேற்ற கடைசி பொதுநிகழ்ச்சி ஆகும்.

அதன் பின்னர் அந்நாட்டின் மிக முக்கிய நிகழ்வான வட கொரியாவை நிறுவியவரும் கிம் ஜோங் உன்னின் தாத்தாவுமான கிம்-2 சங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கிம் பங்கேற்காதது பல்வேறு யூகங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

ஜனாதிபதி கிம் ஜோங் உன், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் அவரின் உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமானதாக வெளியான தகவல் உலகையே பரபரப்பாக்கியது. இது குறித்து வட கொரியா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் தற்போது தென்கொரியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

உரத்தொழிற்சாலையை திறந்துவைக்கும் விழாவில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் பங்கேற்றுள்ளதாகவும், தற்போது அந்நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 20 நாட்களாக வெளியான பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )