சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமை பற்றி அந்நாட்டு பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றுள்ளது

சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமை பற்றி அந்நாட்டு  பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றுள்ளது

(UTV | சுவிட்ஸர்லாந்து ) –     சுவிட்ஸர்லாந்தில், பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தங்கள் குறித்து நேற்று (05) அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ள்ளது.

டென்மார்க், ஸ்பெயின், பெல்ஜியம், மற்றும் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ‘ஒருவரின் அனுமதியின்றி, பாலியல் செயல்களில் ஈடுபடுவது’ பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படுகின்றது.

சுவிற்ஸர்லாந்தின் தற்போதைய சட்டத்தின்படி,

✔”ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து , அதற்கு அந்த பெண்ணிடமிருந்து எதிர்ப்பு வெளிப்படுவது ” ஆகிய செயல்கள் நடந்தால் மட்டுமே, அது பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படுகிறது.

✔ஒரு பெண் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், அவளுடைய சம்மதமின்றி பாலியல் வன்புணர்வு செய்வதும் கற்பழிப்பு முயற்சி குற்றமாக கருதப்பட வேண்டும் என்பதனால் அந்நாட்டின் பாலியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தேவை ஏற்பட்டுள்ளது.

 

✔ஆண்-பெண் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி யார் பாதிக்கப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை சட்டத்தில் பாலியல் குற்றமாக கருதப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக நேற்றைய தினம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தங்கள் தேவை எனும் தலைப்பில் மும்முரமாக விவாதம் நடைபெற்றது.

புதிய பாலியல் சட்ட திருத்தத்தின்படி,

✔ஒருவருடைய அனுமதியின்றி அவரிடம் பாலியல் செயல்களில் ஈடுபடுவது வன்புணர்வு குற்றம் என முன்மொழியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ✔அது குழப்பத்தை உருவாக்கும் மற்றும் நடைமுறையில் வைப்பது கடினம் என்று கூறி பல வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த விருப்பத்தை எதிர்த்துள்ளனர்.

எனினும், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக நடந்துவரும் பல ஆண்டு கஷ்டத்திட்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக இது அவதானிக்க முடிகின்றது.

பாராளுமன்ற இரு சபைகளிலும் இவ்விவகாரம் குறித்த ஒருமித்த முடிவு எட்டப்பட்ட பின்னர், இவ்விடயம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ், பொதுமக்களின் வாக்கெடுப்புக்குசென்று . அதன்பின்னரே சட்டம் அமலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )