நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது

(UDHAYAM, COLOMBO) – நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது. ஒரு கட்டிலில் இரண்டு நோயாளிகளுக்கு மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்ற 8 ஆம் இலக்க வார்டிலும் சிரமங்களுக்கு மத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

[accordion][acc title=””]படவிளக்கம்[/acc][/accordion]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/NEGAMBO-HOSPITAL-UDHAYAM-SINHALA.jpg”]

இங்கு சிறுவர்களோடு தங்கியிருக்கும் பெற்றோர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் நிலையும் அப்படியே உள்ளது.

இந்த வைத்தியசாலையில் டெங்கு விசேட வைத்திய பிரிவும் உள்ளது. இதன் காரணமாக வெளி பிரதேசங்களிலிருந்தும் டெங்கு நோயாளிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையான நான்கு மாத காலத்தில் நீர்கொழும்பில் 536 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். இந்த வருடம் டெங்கு காய்யச்சலினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி வைத்தியசாலையில் இறந்துள்ளனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிகிச்சைப் பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் நிலந்தி பத்திரண தெரிவித்தார்.

இதேவேளை, நீர்கொழும்பு நகரிலும் அயற்பிரதேசங்களிலும் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடல் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. வடிகான்கள் சுத்தப்படுத்தப்படாமை. ஓடைகளில் உள்ள குப்பைகள் மற்றும் தாவரங்கள் அகற்றப்படாமை, தொடர்பாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *