22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

(UTV | கொழும்பு) – இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதத்திற்கும் இடையில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், இதுவரை 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்…

Read More

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார.

(UTV | கொழும்பு) – நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கம் நாட்டை கடன் வலையில் சிக்க வைத்ததினால் தற்போது அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனவும் தெரிவித்தார். இந்த நாட்டில் ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்தக் குழுவும் அவமானப்படுத்தப்படவில்லை என்று…

Read More

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

(UTV | கொழும்பு) – 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கூறி கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

2024 ஆம் ஆண்டில் 1.8 % அபிவிருத்தியை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம் – செஹான் சேமசிங்க

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

Read More

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே கரணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக குறித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகலா, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, இலங்கை…

Read More

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு விசேட அறிக்கைகள் மற்றும் இதற்கு முன்னர் கோப் குழு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத் தலைமையிலான கோப் குழுவிற்கும்…

Read More

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து.

(UTV | கொழும்பு) – காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கின்றது. புதிதாக பிறந்த மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என பிபிசிக்கு தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். புதிதாக பிறந்த குழந்தைகளிற்கான தீவிரகிசிச்சை பிரிவில் மின்சாரம் செயல் இழந்துள்ளதால் 37 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.இந்த குழந்தைகளை இருதயசத்திரசிகிச்சை பிரிவிற்கு மாற்றியுள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த குழந்தைகளின்…

Read More

வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக “டிஜிகொன்” பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் – சச்சிந்ர சமரரத்ன.

(UTV | கொழும்பு) – 2030 ஆம் ஆண்டாகும் போது டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன தெரிவித்தார். இலங்கையில் முதல் தடவையாக டிஜிட்டல் பொருளாதாரத்தை பரந்த அரச மற்றும் தனியார்…

Read More

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணி, நாட்டின் கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அணி தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார். இலங்கை அணியின் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) – மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இருவரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More