புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையிலபதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான் குணரத்ன மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி அரச தலைமை சட்ட ஆலோசகர் ஜனக் த சில்வா ஆகியோரே மேன் முறையீட்டு நீதிமன்ற நிதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

Read More

புதிய இராணுவத்தளபதி உத்தியோகபூர்வமாக பதிவியேற்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க 22வது இராணுவ தளபதியாக உத்தியோக பூர்வமாக பதவியேற்றார். இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா புதிய இராணுவ தளபதியை வரவேற்றார். இந்த நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள் , பணிப்பாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜெனரல் கிரிஷாந்த…

Read More

புதிய லக்கல நகரம்

(UDHAYAM, COLOMBO) – பழைய லக்கல நகருக்கு பதிலான புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மஹாவலி அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்காக நான்காயிரத்து 500 மி;ல்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மொரஹாகந்தஇ களுகங்கை திட்டத்தின் கீழ் இந்த நகரம் அமைக்கப்படுகிறது. பொலிஸ் கட்டடத்தொகுதிஇ விளையாட்டு அரங்கம்இ பிரதேச சபை அலுவலகம்இ தபால் அலுவலகம்இ பிரதான பஸ் தரிப்பு நிலையம் என்பனவற்றின் நிர்மாணப் பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன.

Read More

2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்

(UDHAYAM, COLOMBO) – அறிவுபூர்வமான கலந்துரையாடல் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. புலத்கொஹூபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜே விபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார். பொருத்தமற்ற காரணத்தினால் மகிந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பொருத்தமற்றதாக கருதப்படுவதனால் 2020 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும். இந்த இருவரும் நாட்டுக்கு பொருத்தமற்றவர்களாயின் மாற்று தேர்வொன்று…

Read More

புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் – பிரதமர் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் கடந்த வாரம் சந்திப்பு நடத்தி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சிலவிடயங்களில் அனைத்து தரப்பும் இணங்கியுள்ளன. அவற்றில் மாகாண சபை அதி கூடிய அதிகாரங்களை பகிர்வதற்கும், முதலமைச்சருக்கு மேலதிக அதிகாரங்களை பகிர்வதும் உள்ளடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

Read More

இலங்கை அணியின் புதிய பயிற்சிவிப்பாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதியினால் Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனம் வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து வில்லைகளை உற்பத்தி செய்யும் இலங்கையிலுள்ள பாரிய மருந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க, மத்திய மாகாண…

Read More

இராஜதந்திர உறவினை மேம்படுத்த தாய்வான் புதிய கொள்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை உள்ளிட்ட 18 ஆசிய நாடுகளுடனான இராஜதந்திர உறவினை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கையை தாய்வான் அமுலாக்கியுள்ளது. கல்வி, சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் புதிய உறவினை பேணுவது இதன் இலக்காகும். இந்த கொள்கையின் கீழ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருடாந்தம் 5000 மாணவர்களை தமது நாட்டின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பயிற்சியளிப்பு நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் தாய்வான் அமைச்சர் ஜோன் டெங் தெரிவித்துள்ளார்.

Read More

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்குவை பரவலை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தாவர உண்ணி நுளப்புகளை முதல் முதலில் கிராம பகுதிக்கு வெளியிடப்பட்டமையானது, டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கப்படும் புகை போன்ற காரணங்களால் நகர் புறங்களில் அந்த தாவர உண்ணி நுளம்புகள் அழியும் அவதானத்தால் என மருத்துவ ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்புகள் ஊடாக எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிலையத்தின் இயக்குனர் லகஷ்மி குமராதிலக்க தெரிவித்துள்ளார்.

Read More

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்திய நாடுகள் நிதி வலயமைப்பு இதனை முன்னெடுக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் பரிசோதனை ஆய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Read More