இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்

(UTV|COLOMBO)-தன்னிச்சையாக கைது செய்யப்படுவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று சிறப்பு நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர். நேற்று இலங்கை வந்த இந்த குழுவினர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பர். அந்த காலப்பகுதியில் இவர்கள் சிறைச்சாலைகள், காவல்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று கைது செய்யப்படுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர். அத்துடன் அவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது பெறப்படும் தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்த…

Read More

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…

Read More

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அழகுக்கலை நிபுணர்களுக்கு ஜனாதிபதி விருது

(UTV|COLOMBO):அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும்; நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.   அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத்துறையில் உள்ளவர்களை கௌரவிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும் . இத்துறையின் முன்னேற்றத்திற்காக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் 16 பேருக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.  …

Read More

சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவர்கள் நேற்றிரிவு கொழும்பை வந்தடைந்தனர். இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தலைமையிலான குழுவினர்; வரவேற்றனர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி குழுவினர் கவனம் செலுத்துவர்.

Read More

2006இல் எழுதிய வரலாற்றை இலங்கை அணி மாற்றியெழுதுமா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி அதிக ஓட்ட எண்ணிக்கையை, வெற்றி இலக்காகக் கொண்ட போட்டியை 2006ஆம் ஆண்டு சந்தித்திருந்தது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இவ்வாறு இலங்கை வெற்றி இலக்காக 352 ஓட்டங்களை துரத்தியிருந்தது. அதேபோல, இலங்கை அணி 300க்கும் அதிக ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு வெற்றிப்பெற்ற மற்றுமொரு சந்தர்ப்பம் 1998ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. சிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியிலேயே இது பதிவானது. இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில்…

Read More

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4 ஆம் நாள் ஆட்டம் இன்று

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. இந்தநிலையில் நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது, தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது. முன்னதாக சிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 356 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதலாவது இனிங்சிற்காக 346 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது….

Read More

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் – செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி; தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். [accordion][acc title=”அமைச்சர் உரையாற்றியதாவது”][/acc][/accordion]…

Read More

திருச்சியில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதம்

(UDHAYAM, COLOMBO) – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளவர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களை சிறை வளாகத்தில்…

Read More

இலங்கை – பங்களாதேஷுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஷுக்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையில் வர்த்தக, பொருளாதார மற்றும் பலதுறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதன்போது படகில் இருந்து, தடை செய்யப்பட்டுள்ள இரசாயண பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More