சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 91 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக மாவட்டங்களின் செயலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் பலியானதுடன், 70 பேரை காணவில்லை என மாவட்ட செயலாளர் யு.டீ.ஜெயலால் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரத்தினபுரியில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 29 பேர் மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மாத்தறை…

Read More

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய வைத்தியசாலைகள்

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் நேற்றுக் காலை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சைகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள். எவ்வாறேனும் பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளும் அத்தியாவசிய சிகிச்சைகளும் இடம்பெற்றன. அனுராதபுர போதனா வைத்தியசாலை, தியத்தலாவ ஆதார வைத்தியசாலை, அம்பாறை பெரியாஸ்பத்திரி போன்றவற்றில்…

Read More

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பழைய அவிசாவளை வீதியின் அம்பதலே சந்தி மற்றும் கொஹிலவத்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. அது , கொஹிலவத்த பொது மயானத்திற்கு அருகில் களனி கங்கைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தாகும். இந்த நிலைமை காரணமாக மாற்று வீதியாக கொடிகாவத்தை -வெல்லம்பிடிய ஊடாக பழைய அவிசாவளை வீதியை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Read More

மோடியின் வருகை காரணமாக இருநாட்டு உறவு மேலும் வலுப்பெறும் -மனோ

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர கட்சியின் அமைச்சரொருவர் இணை அமைச்சரவை பேச்சாளராக செயற்படுவது தொடர்பில் பிரச்சினை இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர ்இதனை தெரிவித்தார். மேலும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு  சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் , இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர ்தெரிவித்திருந்தார்.

Read More