பிடியெடுப்புக்களை தவற விடுவது தொடர்பில் மஹலவின் கருத்து

(UDHAYAM, COLOMBO) – எந்தவொரு கிரிக்கட் வீரரும் போட்டியின் போது பிடியெடுப்பை தவறவிட்டால் அது அவரின் உடற் தகுதி தொடர்பான பிரச்சினை இல்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு பிடியெடுப்புக்கள் தவற விடுவது அந்த கிரிக்கட் வீரரின் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார். பெர்முடா அணியின் வீரர் ஒருவரது புகைப்படத்துடன் மஹல ஜயவர்தன தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பதிவை வெளிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய போட்டியில் சுழற்பந்து…

Read More

புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் – பிரதமர் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் கடந்த வாரம் சந்திப்பு நடத்தி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சிலவிடயங்களில் அனைத்து தரப்பும் இணங்கியுள்ளன. அவற்றில் மாகாண சபை அதி கூடிய அதிகாரங்களை பகிர்வதற்கும், முதலமைச்சருக்கு மேலதிக அதிகாரங்களை பகிர்வதும் உள்ளடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

Read More

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை சர்வதேச சட்டம் தொடர்பான சட்டத்தரணி திருமதி சரணி குணதிலக பாராட்டியுள்ளார். தமது உறவினர்கள் காணாமல் போனதன் காரணமாக எதிர்பார்ப்புடன் இருக்கும் தரப்பினருக்கு இதன்மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சில தரப்பினர் காணாமல் போனோர் தொடர்பான அலுவலங்களை அமைப்பது தொடர்பில் உரிய தெளிவின்றி செயல்படுகின்றனர். இந்த அலுவலகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் காணாமல் போனவர்களுகானது…

Read More

ஆசிரிய நியமனம் , இடமாற்றம் தொடர்பில் புதிய கொள்கை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலநறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கு நிகழ்வு இன்று (22) முற்பகல் நடைபெற்றபோதே ஜனாதிபதி…

Read More

பிணை முறி விநியோகம் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ள கணக்காய்வாளர் நாயகம்

(UDHAYAM, COLOMBO) – பிணை முறி விநியோகத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நேரடி சேமிப்பு முறைமையை தற்காலிகமாக நிறுத்தியமையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நஷ்டத்திற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம்,சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்திற்கு முன்னர் தேசிய கடன் முகாமைத்துவ குழு ஒன்று…

Read More

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று இரவு கலந்துரையாடவுள்ளனர். அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் புதிய அரசியல் அமைப்பு குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அரசியல்…

Read More

வட மாகாண சபை பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படா நிலையில், பல்வேறு தரப்புடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் நேற்று இரவு 10.00 மணி வரையில் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் பலர் பங்குகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அந்த பேச்சு வார்த்தையில் இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில்….

Read More

இலங்கை தொடர்பில் இந்திய மக்களின் நிலைபாடு மாறவேண்டும்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு மாற வேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் தற்போது எதுவித சிரமங்களும் இன்றி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று விஜிபி உலக தமிழ் சங்கம் இலங்கைக்கு வழங்கிய திருவள்ளுவர் சிலைகளில் ஒன்று புத்தளம் இந்துக் கல்லூரியில் திரைநீக்கம செய்துவைக்கும் நிகழவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி சந்தோசமும் கலந்து கொண்டமை…

Read More

டயகமவில் மாணவி ஒருவரை நபரொருவர் பலாத்காரம் செய்யமுற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – டயகமவில் மாணவி ஒருவரை நபரொருவர் பலாத்காரம் செய்யமுற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு டயகம மோனிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் நபரொருவரால் பாலியல் ரீதியான பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து உரிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட மாணவியின் தாயார் இன்று டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

Read More

கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி விஷேட அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் ரியாலை ஏற்கவேண்டாம் என எந்தவொரு வங்கிக்கும் அறிவிக்கவில்லை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியால் பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்டளவு பணமே இவ்வாறு பரிமாற்ற வாய்ப்பாளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More