வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மத்திய அமைச்சு பதவிகளில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக எஸ் எம் ரஞ்ஜித் தெரிவித்துள்ளார். இதற்கமயை போக்குவரத்து, விளையாட்டு, கூட்டுறவு மற்றும் இளைஞர் விவகார ஆகிய அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக தாம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மாகாண சபையில் தாம் சுயாதீனமாக இயங்குவதற்கு எதிர்பார்த்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read More

மத்திய மாகாண அமைச்சராக திலின பண்டார தென்னகோன்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாண சபை உறுப்பினரான திலின பண்டார தென்னகோன்  மத்திய மாகாண அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இதற்கான நியமனக் கடிதம் திலின பண்டார தென்னகோனிற்கு வழங்கப்பட்டது. மத்திய மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், மகளிர் விவகாரங்கள், கிராம அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்த்துறை தொடர்பான அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்த பிரமித்த பண்டார தென்னகோனிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால…

Read More