வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்
(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – பமுரன பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது. 3 மாடி கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிலே இவ்வாறு தீ பரவியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கையினை மாத்தறை மாநகர சபை தீயணைப்பு பிரிவு, காவற்துறை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். தீ பரவலுக்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.