சபைக்கு வர மாட்டேன்- சிறையிலிருந்து கெஹலிய
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், சுகவீனம் காரணமாக அவர் பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளர் ஒருவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, சபாநாயகரின் பணிப்புரையின் பேரில், அவரை பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதற்கான அனைத்து…