உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் திறந்து வைப்பு!
(UTV | கொழும்பு) – உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செத்தம் வீதியில் உள்ள பழைய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உறுமய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், காணி அபிவிருத்தி…