ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி, அமைச்சர் வஜிர அபேயவர்த்ன, அவரது செயலாளர் பி.பீ.அபேயகோன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தேவையான நிதியை, நிதியமைச்சில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்….

Read More

இலங்கைக்கு இன்று முதல் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று விடுக்கப்பட்டடிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று காலை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் விதித்திருந்த தடை இதற்கமைவாக தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வரிச் சலுகை…

Read More

‘ஓசியன் சீல்ட்’ இன்று திருகோணமலை வந்தது

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் மிகப்பெரிய கப்பலான ‘ஓசியன் சீல்ட்’  இன்று திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டே இந்தகப்பல் திருகோணமலை சென்றுள்ளது. சிறந்த உறவு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில்  இணைந்து செயற்படும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தக்கப்பலின் பயணம் அமைந்துள்ளதாக அந்த நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கப்பலுக்கு தலைமை தாங்கி வந்துள்ள எயார் மார்சல் ஒஸ்போர்ன் கருத்து வெளியிடுகையில் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையினர்…

Read More

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோய் வேகமாக பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக ஒன்றுகூட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு செயலணி ஜனாதிபதி தலைமையில் இன்று ஒன்றுகூடவுள்ளது. 2017ம் ஆண்டு இதுவரையில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,623 வரை அதிகரித்துள்ளதுடன், 115 மரணங்களும் இடம்பெற்றுள்ளன. 2014ம் ஆண்டு 47,246 டெங்கு நோயாளர்களும் 97 மரணங்களும்…

Read More

கீதாவின் மனு இன்று விசாரணைக்கு

(UDHAYAM, COLOMBO) – கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனு, மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மனுவின் விசாரணை நிறைவுறும் வரை தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதை தடுத்து, இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கீதா குமாரசிங்க தனது மனுவில் கோரியுள்ளார்.

Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் பிரதமர் ஒருவர் முதன்முறையாக மலையக பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் நோர்வுட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கண்டி தலதா மாளிகைக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார். மஹாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சுதந்திரத்துக்கு முன்னரான விஜயத்துக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் மலையக பகுதிக்குச் செல்லும்…

Read More

சர்வதேச வெசாக் தின வைபவம் இன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது. இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ளார். ‘பௌத்த போதனைகளின் அடிப்படையில் சமூக நீதியின் மூலம் உலக சமாதானத்தை நிலைநாட்டுதல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச வெசாக் தின நிகழ்வில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்படும். இந்த விழாவின் நேர்முக வர்ணனைகளை…

Read More

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது நீதிமன்ற…

Read More

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிளிநொச்சியிலும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் நிர்வாக முடக்கல் போராட்டத்தின் இடைநடுவே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக அங்கிருக்கும்…

Read More